மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலை மற்றும் மானுட அறிவியல் தமிழ்த் துறையில் 15.06.2024 அன்று காலை 10.30 முதல் 12.30 வரை ஜம்புத்தீவு பிரகடனம் என்னும் தலைப்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரையின்படி விழாவானது நடைபெற்றது.இவ்விழாவில் 210 மாணவர்கள் கலந்து கொண்டனர் விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்த அங்கமாக. குத்து விளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. இவ்விழாவில் சார்பு துணைவேந்தர் முனைவர் C. கிருத்திகா அவர்களும், பதிவாளர் முனைவர் சுரேகா வரலட்சுமி அவர்களும், மாணவர்கள் நலமன்ற அமைப்பாளர் முனைவர் லில்லி கிறிஸ்டோபர் அவர்களும், சிறப்பு விருந்தினர் முனைவர் மா. பிரகாஷ் (வேல்ஸ் பல்கலைக்கழகம்) அவர்களும், கலை மற்றும் மானுட அறிவியல் துறையின் முதல்வர் V. சாந்தி அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஜம்புத் தீவு பிரகடனம் குறித்த வரவேற்பு தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவி ராஜராஜேஸ்வரி நிகழ்த்தினார். விழாவிற்கு வரவேற்புரை முனைவர் க அமலா கார்த்திகா அவர்கள் வழங்கினார். வாழ்த்துரை முனைவர் v. சாந்தி அவர்கள் வழங்கினார். சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு முனைவர் C.கிருத்திகா அவர்கள் சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர் குறித்த ஒரு அறிமுக உரையை முனைவர் செ.மகேஸ்வரி அவர்கள் வழங்கினார். மருதுபாண்டியர்கள் ஜம்புத்தீவு பிரகடனம் என்ற பெயரில் அறிக்கை சமர்ப்பித்தது குறித்து விளக்கமான ஒரு ஆய்வு உரையை முனைவர் ம. பிரகாஷ் அவர்கள் நிகழ்த்தினார். ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த காணொளி காட்சிகள் மாணவர்களுக்கு திரை காட்சிகளாக காண்பிக்கப்பட்டது. விழாவின் நிறைவாக திரு.ப.குமாரவேல் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே நிறைவுற்றது.










